தண்ணீர் பந்தல் திறப்பு
காவேரிப்பாக்கம் பேரூராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
ராணிப்பேட்டை
காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. மொத்தம் 15 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். கடந்த ஒரு வாரமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காக்க பேரூராட்சி சார்பில் தண்ணீர், மோர் பந்தல் திறக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று காவேரிப்பாக்கம் பஸ் நிலையத்தில் தண்ணீர், மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது. இதில் வேலூர் மண்டல உதவி இயக்குனர் (பொறுப்பு) அம்சா, பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், நகர தி.மு.க. செயலாளர் பாஸ்நரசிம்மன், பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story