மேற்கு மாவட்ட பா.ஜனதா அலுவலகம் திறப்பு


மேற்கு மாவட்ட பா.ஜனதா அலுவலகம் திறப்பு
x
சேலம்

தாரமங்கலம்:-

தாரமங்கலம் அருகே உள்ள பெரியாம்பட்டியில் சேலம் மேற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி அலுவலகம் புதிதாக கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் சுதிர் முருகன் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் வாழ்த்தி பேசினார். மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு, புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பேசினார். இதில் தாரமங்கலம் நகர தலைவர் தாமரை கண்ணன், ஒன்றிய தலைவர் ராமசாமி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், மண்டல நிர்வாகிகள், கிளை தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story