ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்: மேட்டுப்பாளையம்- கோவை இடையே மெமு ரெயில் சேவை-மத்திய மந்திரி எல்.முருகன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்


ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்:  மேட்டுப்பாளையம்- கோவை இடையே மெமு ரெயில் சேவை-மத்திய மந்திரி எல்.முருகன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 5 Dec 2022 12:15 AM IST (Updated: 5 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம்- கோவை இடையே மெமு ரெயில் சேவையை மத்திய மந்திரி எல்.முருகன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம்- கோவை இடையே மெமு ரெயில் சேவையை மத்திய மந்திரி எல்.முருகன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

மெமு ரெயில் சேவை

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு வாரத்தில் 6 நாட்கள் மட்டும் மெமு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மெமு ரெயிலில் மேட்டுப்பாளையம் மற்றும் அதன்சுற்றுப்பகுதிகளில் இருந்து கோவைக்கு அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிக்கு செல்வோர் மிகவும் பயனுடைந்து வந்தனர். இந்த நிலையில் மேட்டுப்பாளையம்-கோவை இடையே ஞாயிற்றுக்கிழமைகளிலும் மெமு ரெயிலை இயக்க பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வாரத்தில் 6 நாட்கள் மேட்டுப்பாளையம் -கோவை இடையே இயக்கப்பட்டு வந்த மெமு ரெயில் சேவை தினசரி இயக்கப்படும் என்று கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். இதனைத் தொடர்ந்து தென்னக ரெயில்வே நிர்வாகம் நேற்று முதல் மேட்டுப்பாளையம்- கோவை இடையே ஞாயிற்றுக்கிழமைகளிலும் மெமு ரெயில் இயக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

மத்திய மந்திரி தொடங்கி வைத்தார்

இதனை தொடர்ந்து இதன் தொடக்க நிகழ்ச்சி சேலம் ரெயில்வே கோட்டம் சார்பாக மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் நடைபெற்றது. இதற்காக மெமு ரெயில் என்ஜின் மற்றும் பெட்டிகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பலூன்கள் கட்டப்பட்டு இருந்தது. நிகழ்ச்சிக்கு மத்திய மந்திரி எல். முருகன் தலைமை தாங்கி கொடியசைத்து மெமு ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். இதில் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாசன் வரவேற்றுப் பேசினார். முடிவில் சேலம் ரெயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம் நன்றி கூறினார்.


Next Story