தமிழகம் முழுவதும் 1,460 சிறப்பு பஸ்கள் இயக்கம் - போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு


தமிழகம் முழுவதும் 1,460 சிறப்பு பஸ்கள் இயக்கம் - போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
x

கோப்புப்படம்

வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,460 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முகூர்த்தம், வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 24-ந் தேதி(வெள்ளிக் கிழமை) அன்று 535 பஸ்களும் 25-ந் தேதி (சனிக்கிழமை) 595 பஸ்களும் கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 24, 25-ந் தேதிகளில் 130 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் செல்போன் செயலி(ஆப்) மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story