திருவட்டாரில் புதுப்பிக்கப்பட்ட 5 புதிய பஸ்கள் இயக்கம்; அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்


திருவட்டாரில் புதுப்பிக்கப்பட்ட 5 புதிய பஸ்கள் இயக்கம்; அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 25 Oct 2023 6:45 PM GMT (Updated: 25 Oct 2023 6:46 PM GMT)

திருவட்டாரில் புதுப்பிக்கப்பட்ட 5 புதிய பஸ்களை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்

கன்னியாகுமரி

திருவட்டார்,

கன்னியாகுமரி மாவட்டத்தில் பழுதடைந்த நிலையில் இருந்த 97 பஸ்கள் புதுப்பிக்கப்பட்டு இயக்கப்பட உள்ளது. இதில் திருவட்டாரில் 5 புதுப்பிக்கப்பட்ட பஸ்களை இயக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதாவது பேச்சிப்பாறை-குலசேகரம், கன்னியாகுமரி- திற்பரப்பு, அருமனை-தக்கலை, குலசேகரம்- கானாவூர், தக்கலை - திருவரம்பு ஆகிய வழித்தடங்களில் இந்த பஸ்கள் இயக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி தலைமை தாங்கினார். நிர்வாக மேலாளர் ஜெரோலின், தொழில்நுட்ப மேலாளர் மதுக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தொ.மு.ச. மண்டல தலைவர் கண்ணன், திருவட்டார் பேரூராட்சி தலைவி பெனிலா ரமேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் திலீப்குமார், ஆற்றூர் பேரூர் செயலாளர் சோழராஜன், குமரன்குடி ஊராட்சி தலைவர் பால்சன், திருவட்டார் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜான் பிரைட், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீலா, ஏற்றக்கோடு பேரூராட்சி முன்னாள் தலைவர் ரூஸ், அருவிக்கரை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஜான் கிறிஸ்டோபர், மேற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story