திருச்சி மாவட்டத்தில் 600 சிறப்பு பஸ்கள் இயக்கம்
திருச்சி மாவட்டத்தில் 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4-ல் அடங்கிய பல்வேறு பதவிக்கான போட்டி தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 320 தேர்வு மையங்களில் 94 ஆயிரத்து 140 ேபர்கள் எழுதவுள்ளனர். ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் தேர்வை கண்காணிக்கும் பொருட்டு 320 ஆய்வு அலுவலர்கள் மற்றும் துணை கலெக்டர் நிலையில் 12 பறக்கும் படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வாளர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் திருச்சி மாவட்டத்தில் 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளது. இதில் மத்திய பஸ் நிலையத்தில் இருந்தும், சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்தும் ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை, உறையூர், தில்லைநகர், கண்டோன்மெண்ட், கே.கே.நகர், எடமலைப்பட்டிப்புதூர் மற்றும் புறநகரில் திருவெறும்பூர், மணிகண்டம், அந்தநல்லூர், மண்ணச்சநல்லூர், லால்குடி, மருங்காபுரி, மணப்பாறை, புள்ளம்பாடி, வையம்பட்டி, முசிறி, தா.பேட்டை, துறையூர், தொட்டியம், உப்பிலியபுரம், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்தார்.