சிவன் கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்


சிவன் கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 9 Feb 2023 6:45 PM GMT (Updated: 9 Feb 2023 6:46 PM GMT)

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சங்கரன்கோவிலில் இருந்து சிவன் கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தென்காசி

நெல்லை:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வருகிற 18-ந் தேதி சிவராத்திரி மகாபிரதோஷத்தன்று நெல்லை, சங்கரன்கோவில் பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பஸ்கள் இரவு 8 மணிக்கு புறப்பட்டு பஞ்சபூத சிவன் கோவில்களான தாருகாபுரம், சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூர், தென்மலை, தேவதானம் ஆகிய கோவிலுக்கு சென்று விட்டு காலை 6 மணிக்கு வந்து சேருகிறது. இதற்கான கட்டணம் நெல்லையில் இருந்து 300 ரூபாய், சங்கரன்கோவிலில் இருந்து 200 ரூபாய்.

இதேபோல் நெல்லை பஸ்நிலையத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு நவகைலாய சிவன் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு காலை 6 மணிக்கு வருவதற்கு சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டடம் ரூ.600. இந்த பஸ்களுக்கான முன்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.


Next Story