தாம்பரம் - சம்பல்பூர் இடையே முன்பதிவில்லா ரெயில்கள் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


தாம்பரம் - சம்பல்பூர் இடையே முன்பதிவில்லா ரெயில்கள் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

கோப்புப்படம்

தாம்பரம் - சம்பல்பூர் இடையே முன்பதிவில்லா ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் தாம்பரம் - சம்பல்பூர் இடையே முன்பதிவில்லா ரெயிலை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "பயணிகளின் கூடுதல் நெரிசலைக் குறைக்க 22-06-2023 அன்று (நாளை) தாம்பரம் மற்றும் சம்பல்பூர் இடையே சிறப்பு பயணிகள் ரெயிலை இயக்கப்படுகிறது. விரிவான நேரங்கள் மற்றும் பயண நிறுத்தங்கள் கூடிய தகவல் விரைவில் பகிரப்படும்" என்று பதிவிடப்பட்டுள்ளது.

நாளை இரவு 10 மணிக்கு தாம்பரத்தில் இருந்து சம்பல்பூர் புறப்படும் பயணிகள் ரெயில், மறுமார்க்கமாக வரும் 24ம் தேதி சம்பல்பூரில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்பட உள்ளது. இதில் 13 பொதுப்பெட்டிகள், 3 இருக்கை வசதி பெட்டிகள், 1 லக்கேஜ் பெட்டி ரெயிலில் இணைக்கப்பட்டுள்ளது.




Next Story