முதற்கட்ட முகாம்களில் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யாதவர்களுக்கு வாய்ப்பு


முதற்கட்ட முகாம்களில் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யாதவர்களுக்கு வாய்ப்பு
x

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் முதற்கட்ட முகாம்களில் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யாதவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெறுகின்றன. 24-ந் தேதி முதல் நடைபெற்ற முதற்கட்ட முகாம்களில் தவிர்க்க முடியாத காரணங்களால் பதிவேற்றம் செய்யாமல் விடுபட்ட பயனாளிகள் வருகிற 3, 4-ந் தேதிகளில் ஏற்கனவே முகாம் நடைபெற்ற இடங்களிலேயே பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

இரண்டாம் கட்டமானது 249 மையங்களில் வருகிற 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெற உள்ளது. அதற்கான டோக்கன் மற்றும் விண்ணப்ப வினியோகம் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை விற்பனையாளர்களால் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் நடைபெறும்.

இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.


Next Story