தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு பெற வாய்ப்பு


தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு பெற வாய்ப்பு
x

விருதுநகர் மாவட்டத்தில் விவசாய மின் இணைப்பு பெற விரும்பும் விவசாயிகள் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை என்ஜினீயர் லதா கூறினார்.

விருதுநகர்


விருதுநகர் மாவட்டத்தில் விவசாய மின் இணைப்பு பெற விரும்பும் விவசாயிகள் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை என்ஜினீயர் லதா கூறினார்.

விவசாய மின் இணைப்பு

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி விவசாய மின் இணைப்பு கோரி காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு தட்கல் முறையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் இந்த தட்கல் முறையில் மின் இணைப்பு பெற விரும்பும் விவசாயிகள் கீழ்க்கண்ட விவரப்படி ஒரு முறை கட்டணம் செலுத்தினால் இலவச மின்சார இணைப்பு பெற இயலும்.

5 குதிரைதிறன் கொண்ட மின்மோட்டார் விவசாய மின் இணைப்பு பெறுவதற்கு ரூ. 2½லட்சமும், 7.5 குதிரை திறன் கொண்ட மின் மோட்டார் மின் இணைப்பு பெற ரூ.2¾ லட்சமும், 10 குதிரை திறன் கொண்ட மின் மோட்டார் மின் இணைப்பு பெற ரூ. 3 லட்சமும், 15 குதிரைத்திறன் கொண்ட மின்மோட்டார் மின் இணைப்பு பெற ரூ.4 லட்சமும் ஒருமுறை கட்டணமாக செலுத்த வேண்டும்.

முன்னுரிமை

இந்த கட்டணம் செலுத்தும் விவசாயிகளுக்கு ஏற்கனவே தட்கல் முறையில் மின் இணைப்பு கோரி பதிவு செய்தவர்களுக்கும், தற்போது தட்கல் முறையில் பதிவு செய்பவர்களுக்கும் பதிவு முன்னுரிமை அடிப்படையில் இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும்.

எனவே இந்த முறையில் விவசாய மின் இணைப்பு பெற விரும்பும் விவசாயிகள் அருகில் உள்ள மின் பகிர்மான வட்ட நிர்வாக என்ஜினீயர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story