பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு - கிராம சபை கூட்டத்தில் 4-வது முறையாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்...!
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காஞ்சிபுரம்,
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராமங்களில் அமைய இருப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கான முதல்கட்ட பணிகளை மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றது. ஆனால் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 164-வது நாளாக கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குடியரசு தினத்தையொட்டி ஏகனாபுரம் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உள்ளாட்சி தினம் ஆகிய 3 தினங்களில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களிலும் விமான நிலையத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story