இரூரில் பஸ் நிறுத்தத்தை அகற்ற எதிர்ப்பு; பொக்லைன் எந்திரம் சிறைபிடிப்பு


இரூரில் பஸ் நிறுத்தத்தை அகற்ற எதிர்ப்பு; பொக்லைன் எந்திரம் சிறைபிடிப்பு
x

இரூரில் பஸ் நிறுத்தத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூரில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி இங்குள்ள பஸ் நிறுத்த கட்டிடத்தை அப்புறப்படுத்துவதற்காக அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்தனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பஸ் நிறுத்தத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் மேம்பாலம் கட்டி தருமாறு பல முறை மனு கொடுத்திருந்தோம். இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விட்டு சென்று விட்டனர். ஆனால் இன்று வரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே மேம்பாலம் கட்டிய பிறகு பஸ் நிறுத்தத்தை அகற்றி கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர். இதனைதொடர்ந்து இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story