புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு


புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு
x

புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி

திருச்சி மாநகரில் காந்தி மார்க்கெட் அருகே இ.பி. ரோட்டில் வாழைக்காய் மண்டியின் எதிர்ப்புறம் தையல்கார தெருவில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மார்க்கெட்டை சுற்றி 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு வரும் மதுப்பிரியர்களால் மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகிறார்கள். இதனால் அதே பகுதியில் கூடுதலாக ஒரு டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்தநிலையில், வாழைக்காய் மண்டி எதிரே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் சி.ஐ.டி.யு. சுமைப்பணி தொழிற்சங்கத்தினர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க திரண்டு வந்தனர். அப்போது, கலெக்டர் இல்லாததால், அவர்கள் சப்-கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மலைக்கோட்டை பகுதி செயலாளர் பா.லெனின், சி.ஐ.டி.யு. சுமைப்பணி சங்க செயலாளர் சிவகுமார், மாவட்ட துணை செயலாளர் ராஜமாணிக்கம் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story