பா.ஜனதா கொடி கம்பம் அமைக்க எதிர்ப்பு


பா.ஜனதா கொடி கம்பம் அமைக்க எதிர்ப்பு
x
தினத்தந்தி 25 Dec 2022 12:15 AM IST (Updated: 25 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா கொடி கம்பம் அமைக்க எதிர்ப்பு

கோயம்புத்தூர்

துடியலூர்

துடியலூரை அடுத்த செங்காளிபாளையம் அருகே உள்ள காந்தி காலனி பஸ் நிறுத்த பகுதியில் பல்வேறு கட்சிகளின் கொடி கம்பங்கள் உள்ளன. அங்கு பாரதீய ஜனதா கட்சியின் கொடி கம்பம் அமைக்கும் பணிகளை அக்கட்சியினர் தொடங்கினர். இதற்கு அங்குள்ள ஏ.டி. காலனி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பு வலுத்ததால் கொடி கம்பம் அமைக்கும் பணியை நிறுத்துவதாக பா.ஜனதாவினர் தெரிவித்தனர்.

இதற்கிடையில் அங்கு வந்த பா.ஜனதாவை சேர்ந்த 2 பேர், கட்டாயமாக கொடிக்கம்பம் அமைக்க வேண்டும் என்று மீண்டும் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்ததும், பெரியநாயக்கன்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் தாமோதரன், சப்-இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். மேலும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். தொடர்ந்து பா.ஜனதாவினர் மற்றும் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து கொடி கம்பம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.


Next Story