அதிமுக கொடியோடு தயாராகும் ஓபிஎஸ் மாநாடு...அதிமுக கொடுத்த புகார்... பரபரப்பாகும் திருச்சி
திருச்சி பொன்மலை ஜி-கார்னரில், ஓ.பி.எஸ். அணி சார்பில் வரும் 24ம் தேதி முப்பெரும் விழா நடைபெறுகிறது.
திருச்சி,
திருச்சியில் ஓ.பி.எஸ். தரப்பினர் நடத்தும் மாநாட்டில் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி, காவல்துறையில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி பொன்மலை ஜி-கார்னரில், ஓ.பி.எஸ். அணி சார்பில் வரும் 24ம் தேதி முப்பெரும் விழா நடைபெறுகிறது.
இதையொட்டி அ.தி.மு.க பெயர் பதித்த பிளக்ஸ் பேனர்கள், கட்சிக்கொடி கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓ.பி.எஸ் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அ.தி.மு.க முன்னாள் எம்பி ப.குமார் தலைமையில், திருச்சி மாநகர உதவி ஆணையர் சுரேஷ் குமாரிடம், புகார் மனு அளிக்கப்பட்டது.
உரிய வழக்குப்பதிந்து கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது
Related Tags :
Next Story