கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் மேலும் 2 தொகுதிகளில் போட்டி


கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் மேலும் 2 தொகுதிகளில் போட்டி
x

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் மேலும் 2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

கர்நாடகத்தில் மே மாதம் 10-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பாளர் அறிவித்த புலிகேசி நகர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது மேலும் 2 தொகுதிகளில் தங்களது வேட்பாளர்கள் போட்டியிடுவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார். கோலார் தங்கவயல் மற்றும் காந்திநகர் தொகுதியில் 2 வேட்பாளர்களை அவர் அறிவித்துள்ளார். கோலார் தங்கவயல் தொகுதியில் அனந்தராஜ் மற்றும் காந்திநகர் தொகுதியில் கே.குமார் போட்டியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story