ஊட்டியில் ஓ.பி.எஸ். அணியினர் ஆர்ப்பாட்டம்


ஊட்டியில் ஓ.பி.எஸ். அணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Aug 2023 4:30 AM IST (Updated: 2 Aug 2023 4:30 AM IST)
t-max-icont-min-icon

கோடநாடு வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி ஊட்டியில் ஓ.பி.எஸ். அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீலகிரி

ஊட்டி

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி ஊட்டியில் ஓ.பி.எஸ். அணியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் புகழேந்தி, மருது அழகுராஜ், கலைச்செல்வன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை தமிழக அரசு விரைந்து விசாரித்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட புகழேந்தி, மருது அழகுராஜ் கூறும்போது, எடப்பாடி பழனிசாமி இல்லாத அ.தி.மு.க. உருவாகும். எடப்பாடி பழனிசாமியை பா.ஜ.க.வும், தி.மு.க.வும் காப்பாற்றுகிறது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story