"ஓபிஎஸ்.. சசிகலா, டி.டி.வி ஒன்றாக இணைய போகிறோம்.." யார் தலைமை..? வைத்தியலிங்கம் பரபரப்பு பேட்டி


ஓபிஎஸ்.. சசிகலா, டி.டி.வி ஒன்றாக இணைய போகிறோம்.. யார் தலைமை..? வைத்தியலிங்கம் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 4 Dec 2022 8:11 AM GMT (Updated: 4 Dec 2022 8:13 AM GMT)

அனைவரும் ஒன்றுசேர்வது தான் எங்களுடைய விருப்பம் என்று முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

புரட்சி தலைவி சொன்னது போல் அன்னாதிராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வர வேண்டும். அதிமுக நூறாண்டுகாலம் ஆட்சியில் இருக்கும். அதனை நோக்கி பயணிக்கிறோம்.

எங்கள் தலைவர் ஓபிஸ் சொன்ன கருத்து ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமைநீங்கில் அனைவருக்கு தாழ்வு என்ற கருத்தில் இருக்கிறார். அவரது கருத்தை லட்சக்கணக்கான தொண்டர்கள் ஆதரிக்கிறார்கள். பதவியில் இருப்பவர்கள் எதிர்க்கிறார்கள். தொடர்ந்து எதிர்த்தால், எடப்பாடி பழனிசாமியை ஒதுக்கிவிட்டு நாங்கள் ஒன்றுசேர்வோம்.

அனைவரும் ஒன்றுசேர்வது தான் எங்களுடைய விருப்பம். அதாவது எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், சின்னம்மா, தனிக்கட்சி வைத்துள்ள சண்முகம், ஒபிஎஸ் ஆகிய அனைவரும் ஒன்று சேரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஒற்றுமைக்கு ஒத்துவரவில்லை என்றால் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பது தான் உண்மை. அது விரைவில் நடைபெறும்.

திமுக எங்களை ஆட்கொள்ளவில்லை. அதற்கு நாங்கள் இடம் கொடுக்கமாடோம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் கூட்டணியில் இருப்போம். எங்கள் கூட்டணி 40 இடங்களிலும் வெற்றிபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story