பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி


பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
x

பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சி இயக்குனரின் உத்தரவுக்கு ஏற்ப, கலெக்டரின் அனுமதியின் அடிப்படையில் இந்த ஆண்டு பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இடையேயான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் வருகிற 30-ந் தேதி திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்வதற்கு உரிய படிவத்தை பூர்த்தி செய்து பள்ளி தலைமை ஆசிரியரின் பரிந்துரையுடன் போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளர்ச்சி துணை இயக்குனரிடம் அளிக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவிலிருந்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் ஒவ்வொரு போட்டிக்கு ஒருவர் வீதம் மொத்தம் 3 மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். போட்டிக்குரிய தலைப்புகள் போட்டி தொடங்குவதற்கு முன்பு அறிவிக்கப்படும்.

ஒவ்வொரு போட்டிக்கும் முதல்பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.66 ஆயிரம் காசோலையாக வழங்கப்படும்.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.



Next Story