சூடானில் இருந்து வருபவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என சோதனை செய்ய உத்தரவு


சூடானில் இருந்து வருபவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என சோதனை செய்ய உத்தரவு
x

சூடானில் இருந்து வருபவர்களுக்கு மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி சோதனை மேற்கொள்ள விமான நிலையங்களுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் போர் காரணமாக அங்குள்ள இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியாவிற்கு பத்திரமாக அழைத்து வரப்படுகின்றனர். அங்குள்ள தமிழர்களை பத்திரமாக மீட்பதில் மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சூடானில் இருந்து வருபவர்கள் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசியை செலுத்தி இருக்கிறார்களா என்பதை சோதனை செய்ய விமான நிலையங்களுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் நோய் வேகமாக பரவி வரும் நிலையில், அந்த நாடுகளில் இருந்து வருபவர்கள் மற்றும் இங்கிருந்து அந்த நாடுகளுக்குச் செல்பவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

சூடான் நாட்டில் தற்போது மஞ்சள் காய்ச்சல் பரவி வரும் நிலையில், அங்கிருந்து வருபவர்களில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியை செலுத்தாத பயணிகள் கண்டறியப்பட்டு அவர்களை 6 நாட்கள் வரை தனிமையில் வைப்பதற்கான வழிகாட்டுதல்களை பொது சுகாராத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ளார்.


Next Story