அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு..!


அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு..!
x

பட்டியலின பிடிஓவை, அமைச்சர் ராஜகண்ணப்பன் அவமதித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

பட்டியலின பிடிஓவை தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் அவமதித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

புதிய தமிழகம் மற்றும் பறையர் பேரவையின் நிறுவனர் ஏர்போர்ட் மூர்த்தி, பட்டியலின பிடிஓவை அவமதித்து சாதி பாகுபாடு காட்டியதற்காக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரை பரிசீலித்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளது.

1 More update

Next Story