வெளிமாநில தொழிலாளர் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு


வெளிமாநில தொழிலாளர் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு
x

வெளிமாநில தொழிலாளர் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை

வெளிமாநில தொழிலாளர் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை முதன்மை செயலாளரும், தொழிலாளர் ஆணையாளருமான அதுல்ஆனந்த் உத்தரவின்பேரில் வேலூர் தொழிலாளர் இணை ஆணையர் புனிதவதி ஆலோசனையின் பேரில் வேலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஞானவேல் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடைகள், நிறுவனங்கள், ஓட்டல்கள், மருத்துவமனை, தியேட்டர்கள், வணிகவளாகங்கள் உள்ளிட்ட அனைத்து வகை நிறுவனங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது அங்கு பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களுக்கும், வேலையளிப்பவர்களுக்கும், வெளிமாநில தொழிலாளர்கள் சட்டம் மற்றும் விதிகள் குறித்தும், சட்டப்படி கிடைக்க வேண்டிய பலன்கள் குறித்தும் இந்தி, ஆங்கிலத்தில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

மேலும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு பயணப்படி, இடமாறுதல் பயணப்படி வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். அவர்களுக்கு இருப்பிடம், மருத்துவம், பாதுகாப்பு உடைகள், குடிநீர், கழிவறை வசதிகள், உணவகம், காப்பகம் ஆகிய அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் குறிப்பிட்டதை விட குறைவாக சம்பளம் வழங்கக்கூடாது.

தமிழகத்தில் பணிபுரியும், வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை http://labour.tn.gov.in.ism/-என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆய்வின்போது விவரங்களை பதிவேற்றம் செய்யாத நிறுவனங்கள் கண்டறிந்தால் தொழிலாளர் துறையால் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


Next Story