விபத்தில் மூளை சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்


விபத்தில் மூளை சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
x

விபத்தில் மூளை சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை

விபத்தில் மூளை சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா தகரகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட். அவரது மனைவி ஜெபக்குமாரி (வயது 33). இவர்களுக்கு சாமுவேல் (9) என்ற மகனும், ரித்திகா (7) என்ற மகளும் உள்ளனர். தம்பதி இருவரும் தனியார் தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி வேலை முடிந்து ராபர்ட், ஜெபக்குமாரி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். பொன்னை சாலை அணைக்கட்டு சர்ச் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக ஜெபக்குமாரி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக பூட்டுத்தாக்கு பகுதியில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் மூளைசாவு அடைந்தார்.

இதையடுத்து அவருடைய கணவர் ராபர்ட், ஜெபக்குமாரியின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தார். அதைத்தொடர்ந்து அவருடைய உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் தானமாக பெறப்பட்டன.

கல்லீரல், சிறுநீரகங்கள் பூட்டுத்தாக்கு சி.எம்.சி. மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன. தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகள் அதற்காக பதிவு செய்து காத்திருந்தவர்களுக்கு பொருத்தப்பட்டன என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.


Next Story