10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்


10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்
x

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டுக்கான (2021-2022) 10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே மாதம் 6-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 9.3 லட்சம் மாணவ- மாணவிகள் எழுதினர். இதன் முடிவுகள் கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி வெளியிடப்பட்டது.

தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் ஜூலை மாதம் வழங்கப்பட்டன. இதையடுத்து அசல் சான்றிதழ் அச்சிடும் பணி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், 10-ம் வகுப்பு மாணவ, மாணவியர் தாங்கள் படித்த பள்ளிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும், தனி தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் சான்றிதழ்கள் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story