மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் ஆர்ப்பாட்டம்
களக்காட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி
களக்காடு:
களக்காடு யூனியன் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஏ.ஐ.டி.யு.சி. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர் மற்றும் தூய்மை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில், பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. களக்காடு நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர் சங்க தலைவர் இமாம் தலைமை தாங்கினார். பரமசிவம் முன்னிலை வகித்தார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் முருகன், துணை செயலாளர்கள் பாலன், லெனின், முருகானந்தம், பொருளாளர் அயூப் கான் மற்றும் நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story