லாரி மோதி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதம்


லாரி மோதி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதம்
x

லாரி மோதி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்தது.

புதுக்கோட்டை

விராலிமலை தாலுகா கோவில்காட்டுப்பட்டி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இங்கு 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு அதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று காலை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் வழியாக சென்ற டிப்பர் லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக குடிநீர் தொட்டியின் அடியில் உள்ள ஒரு தூண் மீது மோதியது. இதில் தூணின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து சேதமானது. மோதிய வேகத்தில் அதே இடத்தில் டிப்பர் லாரி நின்று விட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து ஊராட்சி நிர்வாகம் லாரியை அப்புறப்படுத்தி விட்டு சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்த தூணை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story