சாலையோரத்தில் கவிழ்ந்த லாரி


சாலையோரத்தில் கவிழ்ந்த லாரி
x
தினத்தந்தி 26 Nov 2022 8:00 PM GMT (Updated: 26 Nov 2022 8:01 PM GMT)

சாலையோரத்தில் லாரி கவிழ்ந்தது.

சேலம்

இளம்பிள்ளை:-

சேலம் சங்ககிரியில் இருந்து ஓமலூர் வரை செல்லும் சாலையை விரிவு படுத்துவதற்காக சாலையின் இரு புறங்களிலும் உள்ள மரங்கள் அகற்றப்பட்டு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. சின்னப்பம்பட்டி அருகே எட்டிக்குட்டை மேடு பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் ஒரு அடி பள்ளம் உள்ளது. நேற்று அதிகாலை மைசூரில் இருந்து பழைய இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு நெல்லைக்கு செல்ல சரக்குலாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் சாலை பலத்த சேதம் அடைந்தது. டிரைவர் காயமின்றி தப்பினார். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story