பா.ஜனதா பெண் நிர்வாகியிடம் போலீஸ் காவலில் விசாரணை
கோர்ட்டு அனுமதியின்பேரில் பா.ஜனதா பெண் நிர்வாகியிடம் போலீஸ் காவலில் விசாரணை நடத்தினர்.
கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் உமா கார்கி (வயது 56). பாரதீய ஜனதா கட்சி நிர்வாகியான இவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கருணாநிதி, பெரியார் உள்ளிட்ட தலை வர்கள் பற்றி அவதூறு தகவல்களை பரப்பியதாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் தி.மு.க. பிரமுகர் ஹரீஷ் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் அவதூறு பரப்புதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உமா கார்கியை கைது செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் உமா கார்கியை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் கோவை 4-வது மாஜிஸ்தி ரேட்டு கோர்ட்டில் நேற்று மனுத்தாக்கல் செய்தனர்.
அதை விசாரித்த நீதிபதி சரவணகுமார், கைதான உமா கார்கியை மாலை 5 மணி வரை மட்டும் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.
அதன்படி போலீசார் உமாகார்கியை நேற்று பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை 4 மணிநேரம் மட்டும் காவலில் வைத்து விசாரணை நடத்தி விட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.
அரசு தரப்பில் மேலும் கூடுதலாகஒரு நாள் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதிக்க வேண்டும் என்று அனுமதி கோரப்பட்டது.
நீதிபதி அனுமதி அளித்ததன் பேரில் மீண்டும் விசாரணைக்காக அவர் கொண்டு செல்லப்பட்டார்.