படப்பை அருகே ஐ.டி. ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகை கொள்ளை


படப்பை அருகே ஐ.டி. ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகை கொள்ளை
x

படப்பை அருகே ஐ.டி. ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்

ஐ.டி. ஊழியர்

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மாடம்பாக்கம் பட்டினத்தார் தெரு கார்த்திக்நகர் பகுதியை சேர்ந்தவர் சிவா (வயது 31). ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 7-ந் தேதியன்று தனது வீட்டை பூட்டிக்கொண்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் திருநெல்வேலிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீடு திரும்பிய சிவா வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து, உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 26 பவுன் தங்க நகை, ½ கிலோ வெள்ளிப்பொருட்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து மணிமங்கலம் போலீசில் அவர் அளித்த புகாரையடுத்து, மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் தாம்பரத்தில் இருந்து வந்த கைரேகை நிபுணர்கள் பீரோவில் பதிவான கைரேகைகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மணிமங்கலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story