கோவில்பத்து சேமிப்பு கிடங்குக்கு வெளியே அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள்

கோவில்பத்து சேமிப்பு கிடங்குக்கு வெளியே அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள்
x

ஆசியாவிலலேயே 2-வது மிகப்பெரிய கிடங்கான கோவில்பத்து சேமிப்பு கிடங்குக்கு வெளியே வெட்டவெளியில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதை வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் பாதுகாப்பாக வைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

ஆசியாவிலலேயே 2-வது மிகப்பெரிய கிடங்கான கோவில்பத்து சேமிப்பு கிடங்குக்கு வெளியே வெட்டவெளியில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதை வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் பாதுகாப்பாக வைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசியாவிலேயே 2-வது மிகப்பெரிய கிடங்கு

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோவில்பத்து பகுதியில் நெல் சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த கிடங்கு 1 லட்சத்து 26 ஆயிரம் டன் இருப்பு வைக்க வசதி உள்ளது.

இது ஆசியாவிலேயே 2-வது மிகப்பெரிய கிடங்காகும். விவசாயிகளிடம் இருந்து கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டு கேரளா மற்றும் அரவை மில்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது.

வெட்டவெளியில் உள்ள நெல் மூட்டைகள்

மீதமுள்ள 25 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டது. இதில் 15 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் கிடங்குக்குள்ளும், 10 ஆயிரம் நெல் மூட்டைகள் கிடங்குக்கு வெளியேயும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது வடக்கு பருவமழை தொடங்க உள்ளதால் சேமிப்பு கிடங்குக்கு வெளியே வெட்ட வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் நெல் மூட்டைகள் நனையும் நிலை உள்ளது.

பாதுகாக்க வேண்டும்

இந்த கிடங்கில் இருந்து தினந்தோறும் 70-க்கும் மேற்பட்ட லாரிகளில் நெல் மூட்டைகள் வெளிமாநிலத்துக்கும், அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது அரவை ஆலைக்கு 10 லாரிகளில் மட்டுமே நெல் மூட்டைகள் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் சேமிப்பு கிடங்கில் நெல்மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன.

எனவே வடக்கிழக்கு பருவமழைகாலம் தொடங்க இருப்பதால் வெட்ட வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் நனையாமல் கிடங்குக்குள் கொண்டு சென்று பாதுகாப்பாக அடுக்கி வைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story