அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன


அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன
x

அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன

திருவாரூர்

நன்னிலம்

இந்த ஆண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் அதிக பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக நன்னிலம், குடவாசல் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி வயல்களில் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதேபோல்

அதம்பார், நெம்மேலி, ஜெகநாதபுரம், மேனாங்குடி, குருங்குளம், வேலங்குடி, திருக்கொட்டாரம், கமுககுடி, கீரனூர், சங்கமங்களம், பாவட்டகுடி, கொல்லுமாங்குடி, பூந்தோட்டம், ஆலங்குடி, கம்மங்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் நெற்பயிர்கள் சாய்ந்துள்ளன.

1 More update

Next Story