புதிய நெல் கொள்முதல் நிலையங்கள் -தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தாா்
திருப்புவனம் பகுதியில் 3 இடங்களில் புதிய நெல் கொள்முதல் நிலையங்களை தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
திருப்புவனம்,
திருப்புவனம் பகுதியில் 3 இடங்களில் புதிய நெல் கொள்முதல் நிலையங்களை தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
3 இடங்களில்...
திருப்புவனம் சுற்றுவட்டார பகுதிகளான ஏனாதி, திருப்பாச்சேத்தி, கீழராங்கியன் காலனி ஆகிய பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு திருப்புவனம் பேரூராட்சி தலைவரும், மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளருமான சேங்கைமாறன் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழரசி கலந்துகொண்டு 3 இடங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்தார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் கிழக்கு ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, நகர் செயலாளர் நாகூர்கனி, மாவட்ட பிரதிநிதிகள் பிச்சைமணி, ஈஸ்வரன், சுப்பையா, ராமலிங்கம், பேரூராட்சி துணைத்தலைவர் ரகமத்துல்லாகான் மற்றும் நிர்வாகிகள் சேகர், மகேந்திரன், கோபால், இளைஞர் அணி அமைப்பாளர் அறிவுக்கரசு, நெல் கொள்முதல் நிலைய கண்காணிப்பு அலுவலர்கள் பெரியசாமி, தங்கச்சாமி மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.