கருங்குளம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம்


கருங்குளம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம்
x

கருங்குளம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையத்தை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் பகுதியில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்தது. ஆதலால் நெல் விளைச்சல் அமோகமாக உள்ளது. இந்நிலையில் கருங்குளம் பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.விடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஏற்கனவே சேத்தூர், கோவிலூர், தேவதானம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கருங்குளம் பகுதியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ, நெல்கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் தனலட்சுமி, கருங்குளம் பாசன விவசாயிகள் சங்க தலைவர் ரவிச்சந்திரராஜா, தமிழக விவசாயிகள் சங்க செயலாளர் முருகேசன், பாலகிருஷ்ணன் ராஜா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். கருங்குளம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.



Next Story