அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்


அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
x
தினத்தந்தி 16 Nov 2022 7:15 PM GMT (Updated: 16 Nov 2022 7:16 PM GMT)

அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைக்கப்பட்டது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து சின்னசேலத்துக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைக்கும் பணி நேற்று நடந்தது. இதை முன்னிட்டு சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலை, மூவாநல்லூர், அசேஷம், தெற்குநத்தம், இடையர்நத்தம் ஆகிய ஊர்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட 2 ஆயிரம் டன் நெல் 156 லாரிகளில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். இதனைத் தொடர்ந்து நெல் அரவைக்காக சின்னசேலம் அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story