கப்பலூரில் நெல் சேமிப்பு கிட்டங்கி மாணிக்கம் தாகூர் எம்.பி. திறந்து வைத்தார்


கப்பலூரில்  நெல் சேமிப்பு கிட்டங்கி  மாணிக்கம் தாகூர் எம்.பி. திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 9 Sept 2023 2:00 AM IST (Updated: 9 Sept 2023 2:01 AM IST)
t-max-icont-min-icon

கப்பலூரில் நெல் சேமிப்பு கிட்டங்கியை மாணிக்கம் தாகூர் எம்.பி. திறந்து வைத்தார்.

மதுரை

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே கப்பலூர் சிட்கோவில் நெல் சேமிப்பு கிட்டங்கி திறப்பு விழா நடைபெற்றது. இதில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி நெல் கிட்டங்கியை திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து உச்சப்பட்டி, மறவன்குளம், வாகைகுளம், காண்டை உள்ளிட்ட பகுதிகளில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை ஆய்வு செய்தார். பின்னர் மாணிக்கம் தாகூா் எம்.பி. கூறுகையில், ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் பாரத் ஜூடோ ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு நேற்றுடன் ஒரு வருடம் ஆகிறது. இந்தியா என்ற பெயரில் கூட்டணி வைத்துள்ளதால் இந்தியாவை பாரத் என பெயர் மாற்றம் செய்ய முயற்சிக்கிறார். அந்த பயத்தினை போக்குவதற்காக சரியான பாடத்தினை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வழங்குவார்கள். கப்பலூர் சுங்கச்சாவடியில் கடந்த 10 வருடங்களாக வசூலித்த பணத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது, இவ்வாறு அவா் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் அம்மாபட்டி பாண்டியன், முன்னாள் தலைவர் ஜெயராமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் உலகநாதன், காமாட்சி வட்டாரத் தலைவர்கள் வீரபத்திரன், முருகேசன், ஓ.பி.சி. பிரிவு தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் கப்பலூர் சந்திரன் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story