படுகர் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் -பா.ஜ.க. தேசிய துணைத்தலைவரிடம் மனு


படுகர் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் -பா.ஜ.க. தேசிய துணைத்தலைவரிடம் மனு
x

படுகர் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் -பா.ஜ.க. தேசிய துணைத்தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி

நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் படுகர் சமுதாய மக்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கடந்த ஜூலை மாதத்தில் பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் போஜராஜன் தலைமையில் மாவட்ட அளவிலான நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் தொடர்ந்து மத்திய அமைச்சர்களை சந்தித்து தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து வருகின்றனர். இந்தநிலையில் ஊட்டியில் ரெயில்வே அமைச்சகத்தின் சார்பில் அங்குள்ள தனியார் ஓட்டலில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ரெயில்வே அமைச்சகத்தின் சார்பில் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ரெயில்வே உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற ரயில்வே அமைச்சகத்தின் நிலைகுழு உறுப்பினர்களின் தலைவரும், பா.ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவருமான ராதா மோகன் சிங்கிடம் படுகரின மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கக் கோரி மனு ஒன்று அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட ராதா மோகன் சிங் அவர்கள் படுகரின மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க உரிய அமைச்சகத்திடம் அளித்து ஆவண செய்யப்படும் என்று உறுதி அளித்ததாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story