கள்ளக்குறிச்சியில் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை
கள்ளக்குறிச்சியில் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி விநாயகா நகரை சேர்ந்தவர் ஸ்ரீரங்கன் மகன் தீபநாத்(வயது 22). இவர் ஐ.டி.ஐ. படித்துவிட்டு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தார். நேற்று ஸ்ரீரங்கன் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் இரவு திரும்பி வந்து பார்த்தபோது தீபநாத் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்ததை பார்த்து அதிா்ச்சி அடைந்தார். மதுவுக்கு அடிமையான அவர் போதையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஸ்ரீரங்கன் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story