தியாகராயநகரில் பெயிண்டரை கத்தியால் வெட்டி செல்போன் பறிப்பு


தியாகராயநகரில் பெயிண்டரை கத்தியால் வெட்டி செல்போன் பறிப்பு
x

தியாகராயநகரில் பெயிண்டரை கத்தியால் வெட்டி செல்போனை பறித்து கும்பல் தப்பி சென்றனர்.

சென்னை

சென்னை தியாகராயநகர் ஆர்.பி.கார்டன் கிருஷ்ணசாமி தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 42). பெயிண்டர். இவர் தன்னுடன் வேலைப் பார்க்கும் கமலாதேவி என்ற பெண்ணுடன் தியாகராயநகர் சுரங்கப்பாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், கமலாதேவி கையில் வைத்திருந்த செல்போனை பறித்தனர்.

பின்னர் கத்தியை காட்டி மிரட்டி முத்துக்குமாரின் செல்போனை கேட்டனர். அவர் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் அந்த கும்பல் அவரை கத்தியால் வெட்டி அவரது செல்போனை பறித்து தப்பி சென்றது. இதில் காயமடைந்த முத்துக்குமார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து கமலாதேவி பாண்டி பஜார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் வழிப்பறி கும்பலை தேடி வருகிறார்கள்.


Next Story