விபத்தில் பெயிண்டர் பலி
விபத்தில் பெயிண்டர் பலி
ராமநாதபுரம் இந்திராநகரை சேர்ந்தவர் குமார் என்ற கலீல் ரகுமான் (வயது38). பெயிண்டரான இவர் மோட்டார் சைக்கிளில் தனது உறவினரான சூரங்கோட்டை வலம்புரிநகரை சேர்ந்த விக்னேஷ் (30) என்பவருடன் சொந்த ஊரான மென்னந்திக்கு சென்றுவிட்டு ராமநாதபுரத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். ராமநாதபுரம் அருகே ஆர்.காவனூர் பஸ் நிறுத்தம் பகுதியில் வந்தபோது அந்த வழியாக எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த கலீல் ரகுமானை சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த டாக்டர் இறந்து விட்டதாக தெரிவித்தார். உடன் வந்த விக்னேஷ்க்கு கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விக்னேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து கார் டிரைவர் சிவகங்கை மேலநெட்டூர் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (44) என்பவரை தேடி வருகின்றனர்.