மாணவ, மாணவிகளுக்கான ஓவியப்போட்டி


மாணவ, மாணவிகளுக்கான ஓவியப்போட்டி
x

மாணவ, மாணவிகளுக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது

மதுரை


மத்திய கல்வி அமைச்சகத்தால் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை முன்னிட்டு, மாணவர்களின் ஆக்கப்பூர்வமான செயல்களை ஊக்குவிக்கும் வகையிலும், தேர்வுகளை பயமின்றி எதிர்கொள்வதற்கு ஏதுவாகவும் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. மதுரை நரிமேடு பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் மதுரையை சேர்ந்த 2 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இருந்து 20 மாணவர்களும், சி.பி.எஸ்.இ., அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த 80 மாணவ, மாணவிகளும் என 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி எழுதிய தேர்வு வாரியர் புத்தகத்தின் அடிப்படையில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டு மாணவர்கள் தங்கள் ஓவியத்திறமையை வெளிப்படுத்தினர். போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ் மற்றும் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் பரிசாக அளிக்கப்பட உள்ளன. 5 சிறந்த ஓவியங்களுக்கு சுதந்திர போராட்ட வீரர்களின் புத்தகங்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தலைப்பு புத்தகங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளன. ஓவியப்போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் சூழலியல், பசுமை, தேச வளர்ச்சி, பிரதமர் மோடியின் படங்களை ஆவலோடு வரைந்து தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர்.


Next Story