ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா
திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திட்டச்சேரி:
திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சித்திரை திருவிழா
திருமருகலில் ரத்தினகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜை நடைபெற்றது.
தேரோட்டம்
தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், அபிஷேக, ஆராதனையும் நடந்தது. நிகழ்ச்சியில் வேளாக்குறிச்சி ஆதீனம் 18-வது குருமகா சன்னிதானம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சாமிகள், கோவில் செயல் அலுவலர் முருகன், தக்கார் தனலெட்சுமி, கோவில் திருப்பணி குழுவினர் மற்றும் கிராமமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 1-ந் தேதி திருக்கல்யாணமும், 3-ந் தேதி தேரோட்டமும் நடக்கிறது.