சோலையம்மன் கோவிலில் சித்திரை திருவிழா


சோலையம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
x

உத்திரம்பட்டு சோலையம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கத்தை அடுத்த உத்திரம்பட்டு கிராமத்தில் உள்ள சோலையம்மன் கோவிலில் சித்திரை மாத திருவிழா நேற்று நடைபெற்றது. காலையில் அம்மனுக்கு நெய், பால், தயிர், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மதியம் அம்மனுக்கு பொங்கல் வைத்து படையல் இடப்பட்டது.

இதை தொடர்ந்து பக்தர்கள் அலகு குத்தி அம்மனுக்கு ஆகாய மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு சோலையம்மன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெற்றது. இதில் ஓச்சேரி, ஆயர்பாடி, தர்மநீதி, தட்சம்பட்டறை, ஈரளம்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story