பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்


பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
x
தினத்தந்தி 30 Jun 2023 12:32 AM IST (Updated: 30 Jun 2023 1:45 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்ட பகுதிகளில் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட பகுதிகளில் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

பக்ரீத் பண்டிகை

இஸ்லாமியர்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகையான பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகை ஹஜ்பெருநாள் எனவும், தியாக திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. இறைவனின் தூதர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக கருதப்படுபவர் இப்ராகிம் நபிகளார்.

இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட துணிந்த இறைதூதர் இப்ராகிமின் தியாகத்தை உலகுக்கு உணர்த்தும் விதமாக பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது.

புத்தாடை அணிந்து...

பக்ரீத் பண்டிகை யொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து அதிகாலை முதலே பள்ளி வாசல்களுக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டனர். தஞ்சை கீழவாசலில் உள்ள அறிஞர் அண்ணா திருமண மண்டப வளாகத்தில் தஞ்சை மாநகர தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. கிளை தலைவர் உமர் ஷாஜகான் தலைமையில் செயலாளர் யாசர்அராபத், பொருளாளர் முகமதுசலீம், துணை செயலாளர் பஷீர்ராஜா, துணைத்தலைவர் சேக்அப்துல்காதர், அணி செயலாளர்கள் முகமது முஸ்தபா, சையது முஸ்தபா ஆகியோர் முன்னிலையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

பெண்கள் பங்கேற்பு

இதில் கிளை இமாம் சேக்அப்துல்காதர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். இந்த தொழுகையில் இஸ்லாமிய பெண்கள் திரளாக கலந்துகொண்டு தொழுகை செய்தனர். பின்னர் அவர்கள் பக்ரீத் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

தஞ்சை ரஹ்மத் பள்ளிவாசலில் மாவட்ட அரசு டவுன்காஜி சையது கார் ஹூசைன்புகாரி ஆலிம் தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. முன்னதாக மகர்நோன் புச்சாவடி பள்ளிவாசலிலும் அவர் கலந்து கொண்டார். இந்த ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அல்அன்சார் பள்ளிவாசல், கிரீன்சிட்டி அல்குர்ஆன் ரஹாத் பள்ளிவாசல், கும்பகோணம் பைபாஸ் சாலை மக்கா பள்ளிவாசல், பண்டிதர்நகர் ரஹ்மத் பள்ளிவாசல், அய்யனாபுரம் மதீனா பள்ளிவாசல், உக்கடை ஹலிமா பள்ளிவாசல், ரெயில்வே காலனி ஈத்கா பள்ளிவாசல், ரகுமான்நகர் அல்ரகுமான் பள்ளிவாசல், விசிறிக்காரதெரு ஹனபியா பள்ளிவாசல், செல்வம்நகர் அல்இஹசான் பள்ளிவாசல், நாஞ்சிக்கோட்டை சாலை அல்நூர் பள்ளிவாசல். எஸ்.என்.எம்.நகர் முஹையத்தின் அப்துல்காதர் ஜீலானி பள்ளிவாசல், சிராஜூதீன்நகர் மதினா பள்ளிவாசல், சேவப்பநாயக்கன்வாரி அபூபக்கர்ரலி பள்ளிவாசல், வண்ணாரப்பேட்டை முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல், அய்யங்கடைத்தெரு பட்வேகார் பள்ளிவாசல், வடக்குவாசல் ஜீனத்தை இஸ்லாமிய பள்ளிவாசல், மானம்புச்சாவடி ஜாமியா பள்ளிவாசல், ரெட்டிப்பாளையம் ரோடு அல்நூர் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல், பர்மாகாலனி ஜாமியா பள்ளிவாசல், தென்கீழ்அலங்கம் சீனிஅலாவா பள்ளிவாசல் மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்கேட் பகுதி, கீழவாசல் ஆட்டுமந்தை தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

ஆடு குர்பானி

பின்னர் இஸ்லாமியர்கள் பலர் தங்கள் வீடுகளில் ஆடுகளை குர்பானி கொடுத்து அவற்றை 3 சமபங்காக பிரித்து ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்து விட்டு 3-வது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்தினர். மேலும் உறவினர்கள், நண்பர்களுக்கும் உணவு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திருப்பனந்தாள்

கும்பகோணம், மேலக்காவேரி, திருப்பனந்தாள், தத்துவாஞ்சேரி, கோணுளாம்பள்ளம், கருப்பூர், செறுகடம்பூர், சிக்கல் நாயக்கன்பேட்டை, திருலோகி, கதிராமங்கலம், சோழபுரம், திருமங்கலக்குடி, ஆடுதுறை, அவனியாபுரம் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள மசூதிகளில் இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். .

அப்போது இஸ்லாமியர்கள் ஒருவருக்ெகாருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். ஆடுகளை பலியிட்டு இறைச்சியை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து கொண்டாடினர்.

பாபநாசம்

பாபநாசம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பக்ரீத் பண்டிகையினை இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாடினர். இதையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது.


Next Story