அரண்மனை கண்மாயில் மீன்பிடி திருவிழா


அரண்மனை கண்மாயில் மீன்பிடி திருவிழா
x

திருமயம் அருகே அரண்மனை கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

மீன்பிடி திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே அரண்மனைபட்டி கிராமத்தில் அரண்மனை கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் உள்ள தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்திவிட்டு கோடை காலத்தில் தண்ணீர் வற்றிய உடன் நடைபெறும் ஊத்தா குத்துதல் எனப்படும் மீன்பிடி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதேபோல் இன்று காலை மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் நத்தம், பூலாம்குறிச்சி, பொன்னமராவதி, ராங்கியம், சிங்கம்புணரி, மணப்பாறை, திண்டுக்கல், திருமயம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் மீன்பிடிக்க கண்மாயில் திரண்டனர்.

10 கிேலா வரை மீன்கள் கிடைத்தது

இதையடுத்து அவர்கள் கண்மாயில் இறங்கி போட்டிப் போட்டுக் கொண்டு ஊத்தாவை வைத்து மீன் பிடித்தனர். இதில் நாட்டு வகை மீன்களான கட்லா, விரால், கெண்டை, கெளுத்தி, ஜிலேபி ஆகிய மீன்கள் ஒவ்வொருவருக்கும் 5 கிலோ, 10 கிலோ என கிடைத்தது.

இதையடுத்து தங்களுக்கு கிடைத்த மீன்களை இளைஞர்கள் ஆர்வமுடன் வீட்டுக்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டனர். மீன்பிடி திருவிழாவை காண அப்பகுதியில் இருந்து ஏராளமானவர்கள் வந்திருந்து கண்டு ரசித்தனர்.


Next Story