பாலமேடு ஜல்லிக்கட்டு - 35 பேர் காயம்


பாலமேடு ஜல்லிக்கட்டு - 35 பேர் காயம்
x

இன்று புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

மதுரை,

பொங்கல் விழாவையொட்டி மதுரை மாவட்டத்தில் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இதில் நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில், இன்று புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் 1,000 காளைகளுடன், 700 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி, வாடிவாசல், பார்வையாளர் மாடத்தில் 2 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் 35 பேர் காயமடைந்துள்ளனர். 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். வீரர்கள் 12 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 12 பேர், பார்வையாளர்கள் 8 பேர், காவலர்கள் 3 பேர் என 35 பேர் காயமடைந்துள்ளனர். இதில் இதுவரை 8 சுற்றுகள் நிறைவு பெற்றுள்ளன . 8 சுற்றுகளில் மொத்தமாக 714 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.


Next Story