பழனி முருகன் கோவில் குடமுழுக்கு: 2 ஆயிரம் பக்தர்கள் குலுக்கல் முறையில் இன்று தேர்வு...!


பழனி முருகன் கோவில் குடமுழுக்கு: 2 ஆயிரம் பக்தர்கள் குலுக்கல் முறையில் இன்று தேர்வு...!
x

பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது.

திண்டுக்கல்,

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாக போற்றப்படும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 27-ம் தேதி குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது. கடைசியாக பழனி கோவிலுக்கு கடந்த 2006-ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது.

இக்கோவிலின் குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ளும்பக்தர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்தது. அதன்படி கடந்த 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை கட்டணம் இல்லாமல் முன்பதிவு நடைபெற்றது.

ஆனால் குடமுழுக்கு விழாவில் 2,000 பக்தர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் முன்பதிவு செய்துள்ள பக்தர்களில் 2 ஆயிரம் பேரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்காக குலுக்கல் நிகழ்வு இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில் தேர்வாகும் பக்தர்களுக்கு குறுஞ்செய்தி, இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


Next Story