மின்சார துறை அமைச்சரிடம் பழனி நாடார் எம்.எல்.ஏ. மனு


மின்சார துறை அமைச்சரிடம் பழனி நாடார் எம்.எல்.ஏ. மனு
x
தினத்தந்தி 14 Jan 2023 12:15 AM IST (Updated: 14 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்துக்கு என்று தனியாக மின்வாரிய மேற்பார்வை பொறியாளரை நியமிக்க வேண்டும் என்று மின்சார துறை அமைச்சரிடம் பழனி நாடார் எம்.எல்.ஏ. மனு கொடுத்து உள்ளார்.

தென்காசி

சுரண்டை:

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் பழனி நாடார் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி மாவட்டம் பிரிந்து நான்கு வருடங்கள் ஆகின்றன. அது முதல் இரண்டு மாவட்டங்களும் தனித்தனியாக மாவட்ட கலெக்டரின் கீழ் இயங்கி வருகிறது. ஆனால் மின்சார வாரியம் மட்டும் இன்னும் பிரிக்கப்படாமல் ஒருங்கிணைந்த நிர்வாகமாகவே இயங்குகிறது. புதிதாக தோற்றுவிக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களிடம் இருந்து மின்சார வாரியம் சம்பந்தமான தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு இரண்டு மாவட்டத்திற்கும் சேர்த்து ஒரே ஒரு மேற்பார்வை பொறியாளர் உள்ளதால் பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் தொய்வு ஏற்படுகிறது. எனவே தென்காசி மாவட்ட பொதுமக்களின் தேவைகளை அறிந்து தீர்வு காணும் வகையில் தனியாக ஒரு மேற்பார்வை பொறியாளர் (எஸ்.இ.) நியமிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் சுரண்டையில் உள்ள உதவி பொறியாளர் அலுவலகம் மிகவும் பழுதடைந்து இடிந்து விடும் தருவாயில் உள்ளது. தாங்கள் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறுவதற்கு முன் சுரண்டையில் உள்ள மின்சார துணை மின்நிலையத்திற்கு புதிய உதவி பொறியாளர் அலுவலகம் கட்டுவதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story