பள்ளிப்பட்டில் குற்றவியல் கோர்ட்டு கட்டுமான பணிகள் திவிரம்
பள்ளிப்பட்டில் குற்றவியல் கோர்ட்டு கட்டுமான பணிகள் விறுவிறு என நடைபெற்று முடியும் தருவாயை எட்டியுள்ளது.
திருவள்ளூர்
பள்ளிப்பட்டு நகரத்தில் உரிமையியல் குற்றவியல் கோர்ட்டு தற்போது சோளிங்கர் சாலையில் தனியார் கட்டிடத்தில் வாடகையில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் மிக குறுகளாக, எந்தவித வசதிகளும் இன்றி இருப்பதால் குற்றவியல் நீதிமன்றத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட அரசு தீர்மானித்து அதற்கான ரூ.5 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து பள்ளிப்பட்டு நகரத்திற்கு வெளியே 4 கிலோமீட்டர் தொலைவில் பொதட்டூர்பேட்டை கூட்டு சாலையில் அரசு நிலம் ஒதுக்கியதில் அங்கு கட்டிட கட்டுமான பணிகள் விறுவிறு என நடைபெற்று முடியும் தருவாயை எட்டியுள்ளது. இன்னும் ஓரிரு மாதத்தில் இந்த பணிகள் முடிக்கப்பட்டு குற்றவியல் உரிமையியல் கோர்ட்டு திறக்கப்பட்டு சொந்த கட்டிடத்தில் செயல்படும் என கூறப்படுகிறது.
Related Tags :
Next Story