ரேஷன் கடையில் பாமாயில் திருட்டு


ரேஷன் கடையில் பாமாயில் திருட்டு
x
தினத்தந்தி 20 July 2023 12:15 AM IST (Updated: 20 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடையில் பாமாயில் திருட்டு

ராமநாதபுரம்

தொண்டி,

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா நீர்க்குன்றம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்படும் பகுதி நேர ரேஷன் கடை குருந்தங்குடி கிராமத்தில் உள்ளது.

கடையின் விற்பனையாளர் கனிமொழி நேற்று கடையைத் திறந்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருள் வினியோகம் செய்ய சென்றுள்ளார். அப்போது அங்கு கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

கடையில் இருந்த 25 லிட்டர் பாமாயில் திருடப்பட்டது தெரியவந்தது.

இதைதொடர்ந்து அவர் திருவாடானை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.


Next Story