கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி
கோவையில் கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
கோவையில் கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
குருத்ேதாலை ஞாயிறு
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நாள் நெருங்குவதை அறிந்து உபவாசமிருந்து ஜெபித்ததாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த உபவாச காலத்தை நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 40 நாள் உபவாசம் இருப்பது தான் தவக்காலம் என அழைக்கப்படுகிறது.
இந்த தவக்காலம் கடந்த கடந்த பிப்ரவரி 22-ந்தேதிதொடங்கியது. இந்த நிலையில் இயேசுவின் சிலுவை மரணத்துக்கு பின் உயிர்த்தெழும் தினமாக ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப் படுகிறது.
ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
அதன்படி நேற்று கோவை மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் குருத்தோலை பவனி நடந்தது.
இதில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியவாறு ஓசன்னா பாடலை பாடி பவனிசென்றனர்.
குருத்தோலை பவனி
கோவை பெரிய கடை வீதியில் உள்ள புனித மைக்கேல் அதிதூதர் ஆலயத்தில் பிஷப் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பங்கு தந்தைகள் மற்றும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
நஞ்சப்பா ரோட்டில் உள்ள கிறிஸ்துஅரசர் ஆலயம், கோவைப்புதூர் குழந்தை இயேசு ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் பவனி நடந்தது.
இதுபோல் சி.எஸ்.ஐ. ஆலயங்களிலும் குருத்தோலை பவனி, மற்றும் ஆராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
குறிப்பாக கோவை திருச்சி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயம், உப்பிலிபாளையம் சி.எஸ்.ஐ. இம்மானுவேல் ஆலயம், ரேஸ்கோர்ஸில் உள்ள ஆல் சோல்ஸ் ஆலயம், காந்திபுரம் சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயம், கோவைப்புதூர் சி.எஸ்.ஐ.ஆலயங்களில் நடந்தது.